தாடியும், மீசையும்
தாடி, மீசையிடம் சொல்கிறது.
இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்...
ஆனால் நீ வீரத்திற்கு,
நான் மட்டும் சோகத்திற்கா?
லஞ்சம்
வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!
அரசியல்
பிறர் சொத்தை சூரையாடினான்...திருடா என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரா என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!