
என் சிநேகம் மாறுமோ?
காணாமலே சிநேகிக்கின்றேன், நிழல்களையும் சிநேகிக்கின்றேன்,
காரிருளிலும், கண்ணீரிலும், பகல் கனவுகளாய் சிநேகிக்கின்றேன்,
காத்திருத்தல் சில சமயங்களில் வெறும் கானலாய் பொய்த்தாலும்,
காட்சிகளும் நிகழ்வுகளும் சில நேரம் வெறுத்திட வைத்தாலும்,
காணாமலே வளர்ந்த சிநேகம், கண்டப்பின் மாறுமோ?
கர்த்தரின் கைவேலையான நீ, புவி வாழ்வின் ஒப்பற்ற பரிசே,
கர்த்தருக்குள் வளர, உபயோகிக்கப்பட்ட அவரின் கருவியே,
கற்பாறைக்குள், கர்த்தர் கசிய வைத்ததான அதிசய சிநேகம்,
ஊமையின் இதயக்குரல் கேட்குமென்றால், காலமாறினும்,
கண்டப்பின்பும், இறுதிவரையிலும், என் சிநேகம் மாறுமோ?